நிறுவன நோக்கம்
தமிழ் நாடு மின் பகிர்மான கழகம் என்றால் தரமான மற்றும் தடையில்லா மின்சாரம் மலிவான விலையில் நுகர்வோர்க்கு வழங்குவது என்பதனை பொருளாக்கிடவே.
எங்களைப் பற்றி
தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-ன் கீழ் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இயங்கி வந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என 01.11.2010 அன்று சீரமைக்கப்பட்டுள்ளது.
அரசின் இலட்சியம்:
மத்திய அரசு 2012க்குள் அனைவருக்கும் மின்சாரம் என்ற கோட்பாட்டை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மின்சார வாரியம் மின்உற்பத்தி மின் அனுப்புகை மற்றும் பகிர்மான கூட்டமைப்புகளில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அரசின் இலட்சியத்தின் மற்றொரு பகுதியாக தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் மின் விநியோகத்தை நிறைவேற்றியுள்ளது. அதே சமயம் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வழங்குவதிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
மின் நிறுவு திறன்:
நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில, மத்திய மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுடன் 18,732.78 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது.
மின் பகிர்மானம்:
31.03.17 அன்று நிலவரப்படி மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 279.27 இலட்சம் ஆகும். மின்வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் மின் பகிர்மான கட்டமைப்பை ஏற்படுத்தி அனைத்து வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்துவதே இராஜீவ் காந்தி ஊரக மின்மயமாக்கல் திட்டத்தின் குறிக்கோளாகும். இத்திட்டம் 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் நீலகிரி, திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மின் உபயோகிப்பாளர்களுக்கு தரமான மற்றும் தடங்கலற்ற மின்சாரத்தை வழங்கவும் ஒட்டு மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 15 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரவும் திருத்தியமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மேம்பாடு மற்றும் சீரமைப்புத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்பகிர்மான கட்டமைப்பு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சிறந்த மின் பகிர்மான கட்டமைப்பை பெற்று திகழ்கின்றது. 1957 முதல் பெற்ற வளர்ச்சி மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 4.3 இலட்சத்தில் இருந்து 279.27இலட்சம் ஆகும். மின்பகிர்மான மாற்றிகள் 3773 எண்ணிக்கையிலிருந்து 2,82,028 எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. தாழ்வழுத்த மின் கம்பிகள் 13,055 கிலோ மீட்டரில் இருந்து 6.19 இலட்ச கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. உச்சகட்ட மின்தேவை 172 மெகாவாட்டிலிருந்து 15,343 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தனிநபர் மின்நுகர்வு 21 யூனிட்டிலிருந்து 1340 யூனிட்டாக உயர்ந்துள்ளது.
மின்சார வாரியத்தை சீரமைத்தல்:
தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலை நி.ளி.விs. 114நாள் 08.10.2008ல் வழங்கியுள்ளது. மேலும்..
வருடாந்திர அறிக்கைகள்(ஆங்கிலத்தில்)
சாதனைகள்
விநியோகம் : (31.03.2024 அன்று)
336.82
Lakhs
Consumers
6.42
Lakh Kilometers
Length of LT lines
1792
Units
Per Capita Consumption
4,15,814
Nos
Distribution Transformers